ஒரு கதை சொல்றேன்… சின்ன கதைதான். அவங்க பழங்குடியினர். அவங்களுக்கு மலையில சுள்ளி பொறுக்கிறதும், தேனடை எடுக்கிறது, கொம்பு எடுத்து வந்து விக்கிறதும் தான் வேலை. அவங்கள் இந்து சனாதனம் பஞ்சமர்கள் என ஒதுக்கி வைத்திருந்தது. அவர்கள் மலையில் வாழ்ந்துட்டு இருக்காங்க. அவங்க காட்டை பத்திரமா வச்சிருந்தாங்க. தங்களை மிருகங்கள்ட்ட இருந்து காப்பாத்திகிட்டாங்க, மிருகங்களை மக்கள்ட இருந்து காப்பாத்துனாங்க. இந்திய அரசியல் சட்டத்தில அவங்க நிலத்தை கவனிங்க.. காடு அவங்க நிலம் தான். அவங்க கிட்ட இருந்து வாங்க முடியாதுனு ஒரு சட்டம் சொல்லிடுச்சு. அத மதிச்சோ இல்லை காட்டை நேசிச்சோ அவங்க இதுவரை வித்ததே இல்லை.
இன்னொரு கூட்டம் நகருக்குள்ள இருக்கு. அவங்க பழங்குடியினர் இல்லை. அவங்களுக்கு மலைனாலே என்னானு தெரியாது. சுருக்கமா சொல்லனும்னா.. ஆண்ட பரம்பரை பெருமை பேசி பார்பனியத்துக்கு கழுவி விடும் ஒரு கும்பல். அந்த ஊர் அரசியல்லையும் சரி, அந்த ஊருக்கான டில்லி லாபியிலும் சரி அந்த கூட்டம் அதிகம். அவங்களுக்கு மலைமேல ரிசார்ட், அது இதுனு வைக்க ஆசை. ஆனா சட்டம் பழங்குடியினருக்கு ஆதரவா இருக்கு. இன்னைக்கும் அங்கே வேலை வாய்ப்பில் அவர்கள் தான் 48% அனுபவிக்கிறார்கள். ஆனா போதலை. உடனே குறுக்குபுத்தி பார்ப்பனியம் கூட சேர்ந்து எங்களை பழங்குடியினரா சொல்லுங்கனு சொல்றாங்க.
அதுவும் எங்க சொல்றாங்க.. மக்கள் மத்தியில் இல்லை. நீதிமன்றத்தில். இடஒதுக்கீடை நீதிமன்றம் முடிவு செய்ய கூடாதுனு சட்டம் தெளிவா சொல்லியிருக்கு. அதுக்குதான் சட்டமன்றம் நாடாளுமன்றம் இருக்கே நீ அதுல தலையிடாதேனு சொல்லியிருக்கு. ஆனா பார்ப்பனிய பிஜேபி விடுமா என்ன ? அவங்க கேட்கிறத கொடுக்க பரிசீலிக்கலாமேனு ஒன்றிய அரசுக்கும் மணிப்பூர் அரசுக்கு கோரிக்கை விடுக்குது. உடனே போராட்டம் வெடிக்குது…
உடனே இந்த பிஜேபி சொம்புகள் சொல்வார்கள், அது கோரிக்கை தானேனு. அதுக்கு ஏன் போராட்டம்னு… அட முட்டாபயலே 10% இடஒதுகீடு கூட இன்னும் செல்லுமா செல்லாதா தெரியாத நிலையிலே அது இப்ப திணிக்கப்பட்டு அவர்களுக்கான மதிப்பெண் குறைக்கப்பட்டு இருக்கிறது. தீர்ப்பு வராதுனு எல்லாருக்கும் தெரியும். ஆனா அதுக்குள்ள அவன் நுழைஞ்சு எல்லாத்தையும் அபகரிச்சுடுவான்.
இந்த கூட்டத்திற்கு பழங்குடியினர் அந்தஸ்து தராதேனு சொல்றங்க. ஆனா அரசு மெளனமா இருக்கு. ஏன்னா இந்த ஊருக்குள்ள இருக்கிற கோஷ்டி அவன் சொன்னதுக்கு எல்லாம் தலையாட்டும் கும்பல். மலைமேல இருக்கிற பழங்குடியினர் அப்படியில்லை. கூடுதலாக அதில் பாதிக்கு மேல் கிறிஸ்தவர்கள். அந்த காண்டு வேற. பழங்குடியினரை தீண்டதகாதவர்கள் சொல்லி ஒதுக்கி வைக்கிர மத நாய்களுக்கு, அவன் யார் கும்பிட்டா என்னா ? இந்திய ஜனாதிபதியின் நிலைமை என்ன ? அவர் பழுங்குடியினர் என்றே அவரை அழைக்கமால் அரசு விழாக்கள் நடக்கிறது. அதை கேட்க வக்கில்லாத இந்த கும்பலுக்கு இதை கேட்க அருகதை உண்டா ? அப்புறம் அவன் உங்க வர்ணாசிரம கடவுளை வணங்கினாலும் வணங்காவிட்டாலும் அவன் பழங்குடியினர் தான். அதை உங்க கடவுளே நொட்ட நினைச்சாலும் முடியாது. அது அவனோட உரிமை. நீ காட்டை வாங்கி என்ன செய்ய போறேனு அவனுக்கும் தெரியும். எல்லாருக்கும் தெரியும். அவன் போராடுறான். சண்டைபோடுறான். அதுக்கு தான் நீ அவன் வீட்டு பொம்பளைகளை நிர்வாணமா ரோட்ல கூப்டுவந்தே. இது அரசு ஆசிர்வாதத்தோட நடந்ததுனு அவனுக்கும் தெரியும். எல்லாருக்கும் தெரியும். மனசாட்சி உள்ளவனுக்கு புரியும்.
இன்னைக்கு அவங்க, நாளைக்கு நாம. என்னடா இப்டி சொல்றேனு நினைக்காதீங்க… இங்க இருக்கிற மேற்கு தொடர்ச்சி மலையோட கனிம வளம் படி. சுத்தி சுத்தி நாலு வழி எட்டுவழி சாலையெல்லாம் எதுக்கு ? கனிம வளங்களை காலி செய்ய தான். ஆனா அவன் அளவுக்கு எல்லாம் நாம எதிர்க்கமாட்டோம். ஏன்னு உங்களுக்கே தெரியும்..!
கருத்துகள்
கருத்துரையிடுக